சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் அறிகுறி!

0
94

SL-parlimentமைத்திரிபால சிறிசேனவினால் நாளை (24) நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படக்கூடிய அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தனர். தேர்தல் முறைமை தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் அதேவேளை, நாளை முற்பகல் 9.30 முதல் இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதம் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்றப் பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்றம் நிறுவப்படும் என இதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியிருந்தார். செப்டம்பர் மாதத்தில் புதிய நாடாளுமன்றம் நிறுவப்படுமாயின் ஓகஸ்ட் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 65 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் அண்மைக்காலமாக அரசியல் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here