தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் *தமிழியல் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் *பங்கு கொண்ட மாணவர்கள் அனைவரும் *முதல்தகுதிநிலைத் (A) தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். *
கடந்த ஆகஸ்டு மாதம் முழுமையான நலவடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்தத்தேர்வில் தோற்றிய பெரும்பாலானோர் மாணவர்களே ஆவர்.
இவர்கள் சம்பினி சூ மார்ன் ,கிளிச்சி,கிறுத்தே,வல் து யூரோப் தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 வரை பயின்றவர்களாவர்.
உபைத்துல்லா பாத்திமா ஹிமாஸா,தனபாலன் பரமலிங்கம்,கோபிராஜ் நிலா,இந்திரநாதன் அபிராமி,கணேஷ் ஹரிஷ்,இராமச்சந்திரன் காயத்திரி,ரவிச்சந்திரன் நிஷானி,றொபின்சன் றொஷேல்,ஜீவகுமார் சுமித்திரா, இராமச்சந்திரன் கார்த்திகா,உமாமகேஸ்வரதாசன் தயாளினி,பத்மநாதன் ரிஜிதா ஆகிய மாணவர்களே நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைந்து தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
பிரஞ்சு அரசு தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழை பட்டமேற்படிப்பிற்கான ஆவணமாக ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்சில் பிறந்தவர்கள், ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் ஆகியோர் தமிழ்மொழியூடாக தமது கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. இந்நிலையிலேயே நமது இளையோர் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று வருகின்றனர்.