வட மாகாண சபை எதிர்வரும் யூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு : அரசியல் ரீதியாக அணுகவும் முடிவு!

0
136

northern_provincial_councilவடக்கு மாகாண சபை மாதாந்த அமர்வு எதிர்வரும் யூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட அரச அதிருக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக அணுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 31 ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை வவுனியா மாவட்ட அரச அதிபர் மீறியுள்ளார். அவருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் படி உறுப்பினர்கள் சபா மண்டப கதவுகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

அதன்போது அடுத்த அமர்விற்கு முன்னர் நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களினால் எடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையினரும் இணைந்து ஜனாதிபதியுடன் பேசுவது என அவைத்தலைவர் தெரிவித்தார் அத்துடன் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டது.

குறித்த விடயத்திலும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். எனினும் இதனை ஏற்றுக் கொள்ளாத உறுப்பினர்கள் காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை போராட்டம் நடத்தினர். பின்னர் சபை அமர்வினை ஆரம்பித்து ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து பி.ப 11.30 க்கு ஆரம்பமாகிய 30 ஆவது சபை அமர்வு. இதன்போது அவைத்தலைவர் தெரிவிக்கையில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுத்தப்பட்டது.

அது தொடர்பிலான தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை என்ற காரணத்தினால் உறுப்பினர்கள் ஏகமனதான வருத்தத்தையும் ஆட்சேபத்தையும் தெரிவித்தனர். இந்த அவை தாமதித்து கூடியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி வவுனியா மாவட்ட அரச அதிபர் தொடர்பில் உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணை மற்றும் கருத்துக்களுக்கு அமைய கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எமக்கு தெரியப்படுத்தப்பட்டது.அது போல ஆளுநருக்கும் நான் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அவைத்தலைவர் என்ற வகையில் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் உரிமை எனக்கு உண்டு. மூன்று சமூகத்தினரும் இணைந்தே அரச அதிபர் தொடர்பில் கோரிக்கையினை விடுத்துள்ளனர். சிங்களவரை மாற்ற வேண்டும் என்றோ அல்லது வேறு ஒரு சிங்களவர் வரக் கூடாது என்று நாம் கோரவோ இல்ல இனவாதம் எம்மிடம் இல்லை.

அரசியல் ரீதியாகவே இது கையாள வேண்டும். இதற்கான முயற்சிகளை துரிதமாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் யூலை மாதம் 23 ஆம் திகதிக்கு சபை ஒத்திவைக்கப்படுகின்றது என்றும் அவைத்தலைவர் சபையில் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here