முல்லைத்தீவில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2455 பேர்  பாதிப்பு!

0
202

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை(02) தொடக்கம் இதுவரை 794 குடும்பங்களை சேர்ந்த 2455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(08) வெளியிடப்பட்ட  புள்ளி விபரங்களின் அடிப்படையில் 1 வீடு முழுமையாகவும், 40 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதுடன் 3 சிறிய மற்றும் மத்தியதர முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 183 குடும்பங்களை சேர்ந்த 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளதுடன், 3 சிறிய மற்றும் மத்தியதர முயற்சியாளர்கள் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 212 குடும்பங்களை சேர்ந்த 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 237 குடும்பங்களை சேர்ந்த 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களை சேர்ந்த 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 01வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு நிதி விடுவிப்புக்காக அமைச்சுக்கு அறிக்கையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(வீரகேசரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here