தமிழர் தாயகப் பகுதிகளில் தற்போது கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதுடன், புரெவி புயலினாலும் கரையோரப் பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பல பகுதிகளிலும் மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளைப் பல அமைப்புகள் முன்வந்து செய்து வருகின்றன.