உலகம் எங்கும் வாழும் தமிழீழ மக்கள் தம்முயிர் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்!

0
904

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவம்பர் 27 அன்று உலகம் எங்கும் வாழும் தமிழீழ மக்கள் தாம் வாழும் நாடுகளில் தம்முயிர் மாவீரர்களை கோவிட் 19 இனைக் கவனத்திற்கொண்டு அதற்கேற்ற வகையில் இப்புனிதர்களின் நாளில் தமது இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், வணக்கத் தலங்களிலும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர்.
பிரான்சில் மாவீரர் துயிலுமில்லத்திலும், சார்சேல் மாநகரத்தில் லெப். சங்கர் நினைவுக்கல்லின் முன்பாகவும், மற்றும் பிரத்தியேகமாக தனியொரு மண்டபத்திலும் அனைத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த தேச விடுதலைப் பணியாளர்களால் ஒளியேற்றி வைக்கப்பட்டது. இல்லங்களில் தமது பிள்ளைகளுடன் பெற்றோர்களுடன் நண்பர்களுடன் நினைவேந்தலினைச் செய்திருந்தனர். தமது தலைநிமிர்ந்த உயர்ந்த வாழ்க்கைக்காகவும், வாழ்வுக்காகவும் தம் தலைகளை சாய்த்து மண்ணிலே விதையாகிப்போன மாவீரர்களை நெஞ்சுருகி வணக்கம் செய்திருந்தனர். இந்த நாட்களில் எம்தேசத்தின் வருங்கால சொத்துக்கள் தாங்கள் காணாத பார்க்காத தமது மாமாக்களுக்கும், அக்கா அண்ணாக்களுக்கும் மூன்றாம் தலைமுறையினர் பாடல்களாலும், நடனங்களாலும், வரைதல்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் தமது கடமைகளைச் செய்திருந்தார்கள்
மனிதநேயமற்ற எம் எதிரியானவன் தனது புத்தபிரானின் போதனைகளுக்கு எதிராக கருணை, காருண்யம், அன்பு, என்பவற்றை மறந்து இறந்து போன தமது பிள்ளைகளுக்கு வருடத்தில் ஒருமுறை யேனும் ஒன்றுகூடிக் கண்ணீர் சிந்தி வணக்கம் செய்யக் கூட அனுமதிக்கவில்லை. சைவக்கோயில்களில் மணிஓசை எழுப்பவோ, கிறிஸ்தவ தேவாலயத்தில் மெழுகுதிரிகள் ஏற்றவோ வழமையான பூசையைக்கூட செய்யவிடவில்லை. மாறாக ஒளியேற்றிய கிறிஸ்தவ வணபிதாவைக் கைதுசெய்து தமது பௌத்த மத ஆதிக்கத்தை சிங்கள தேசம் ஓர் அடக்கு முறையின் மூலமாகச் செய்துள்ளது. ஆனால், சிங்கள தேசம் எதிர்பார்க்காத வகையில் உலகமெங்கும் நவம்பர் மாதத்தில் வரும் இரண்டு பெரும் நாட்களை மக்கள் பெருமிதத்தோடு தான் நினைவு கூர்ந்து இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், தற்போது இருந்து வரும் கோவிட் 19 வைரசுக்கிருமியின் நோய்தாக்கத்திற்கும் உள்ளாகாது அதன் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழ் மக்கள் தாம் வாழும் நாட்டு அரசுகளுக்கும், மக்களுக்கும் சிங்கள தேசத்திற்கும் தமது மனதிலுள்ளதை தெரியப்படுத் தியுள்ளார்கள்.
தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் என்றும், தமிழ்மக்கள் மற்றைய மக்களைவிட அன்பையும், மனித நேயத்தையும், சிறந்த பண்பாட்டையும் கொண்டவர்கள் என்றும், அதேபோல அவர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளும், அதன் தலைவர்கூடச் சிறந்த ஒழுக்கம், நேர்மை, பண்பையும், தர்மத்தின் பாதையில் தமது மண்ணின் விடுதலைக்காக போராடினார்கள் என்று தமது போராளிகளை அவ்வாறே செதுக்கியவர் என்றும் பிரான்சில் வெளிவந்த பிரெஞ்சு சஞ்சிகையொன்று அண்மையில் வெளியிட்டிருந்தது.
மாவீரர் நாளினை முன்னிட்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பல அரசியல் தலை வர்கள் தமது மனக்கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். அதற்கும் அப்பால் சென்று பிரான்சு மண்ணிலே தமிழீழத் தேசியக் கொடியினை 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தாமாகவே விரும்பி மாவீரர் நாளில் ஏற்றிவைத்து தமிழனத்திற்கு பெருமையைத் தேடித்தந்திருந்தார். அவன் தன்னுடைய சிறப்புமிக்க உரையிலே தங்களது உரிமைக்காகப் போராடி உயிரிழந்த பல்லாயிரம் தமிழர்களுக்கு இன்றைய நாளில் தான் மரியாதையை செலுத்தினேன் என்றும் தமிழர்கள் தங்கள் மண்ணில் சுதந்திரத்துடன் சமாதானத்துடன் வாழ்வதற்காக தின மும் இங்குவாழும் தமிழ்மக்களோடு சேர்ந்து போராடி வருகின்றேன் அவர் கள் அனுபவித்த துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எனது அர்ப்பணம் இது என்றும் கூறினார்.
அவரோடு, இந்நிகழ்வில் சார்சல் மாநகர இளம் முதல்வர் தமிழ் மக்களின் நியாயத்தையும், உலகில் எட்டுக்கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் இருப்பதும் அவர்களுக்கு என்றொரு நாடு கேட்பது அவர்களுக்கு உரித்தானது என்றும் அதன் அங்கீகாரத்திற்கான நட்பு நகரமாக சார்சேல் மாநகரம் இருப்பதில் பெருமை கொள்கின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
19.11.2020 அன்று லாக்கூர்னேவ் மாநகர சபையின் முக்கிய கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிராக முக்கிய நான்கு தீர்மானங்கள் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
பாரிசின் வர்த்தக நிலையங்கள் அமைந்திருக்கின்ற லாச்சப்பல் பகுதியில் நவம்பர் மாதத்தில் மாவீரர் வாரத்தில் மஞ்சள் சிவப்பு எழுச்சி நிறக் கொடிகளால் எழுச்சிக் கோலம் பூண்டுவிடும். கடந்த ஆண்டு மே 18 நாளில் சில விசமிகள் உண்மைக்கு மாறாக மேற்கொண்ட செயற்பாட்டால் பாரிஸ் 10 காவல்துறையும் துணை போயிருந்தனர். இதனால் வர்த்தகர்கள் மத்தியில் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருந்தமையால் தமிழ்மக்களின் உண்மை நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும் வகையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், தமிழீழ மக்கள் பேரவை எடுத்த முயற்சி நல்லதொரு தெளிவான புரிந்துணர்வுடனான செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக கவல்துறையினதும், உள்ளநாட்டு அமைச் சினதும் நடவடிக்கைகள் அமைந்திருந்தமை அனைத்து வர்த்தகர்கள் மத்தியிலும், தமிழ்மக்கள் மத்தியிலும் பெரும் சந்தோசத்தை கொடுத்திருந்தது.
தமிழீழத் தேசியத்தலைவரின் 66 ஆவது அகவையும் 26 ஆம் திகதியும், தமிழீழ தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும் 27 ஆம் திகதியும் சிறப்பாக லாச்சப்பல் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதேபோன்று பிரான்சில் வெளிமாநிலங்களில் மாவீரர்நாள் சிறப்பாக நினைவுகூரப்பட்டது
‘மாவீரர்நாள் எமது தேசத்தின் துக்க நாள் அல்ல. நாம் கண்ணீர் சிந்திக் கவலைகொள்ளும் சோக நாளும் அல்ல. இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சிநாள் . எமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சி தினம்” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளுக்கமைய தமிழீழ மக்கள் தம் புனிதர்களுக்கு தமது வரலாற்றுக்கடமையை செய்திருந்தனர். 2020இல் உலகையே உலுக்கி பல லட்சம் உயிர்களை எந்த இன, மத, நிற, மொழி, சமய வேறுபாடின்றி பலவுயிர்களை காவு கொண்டுவருகின்றவேளை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் கோவிட் 19 இன் சட்டவிதிமுறைகளை மீறாது தமது தேசப் புதல்வர்களுக்கான கடமையைச் செய்திருந்தனர். கலைஞர்கள், கலைக்குழந்தைகள், தொழில்நுட்பவியலாளர்கள், தொலைக்காட்சிகள், வானொலி கள் இணையத்தளங்கள் தமது பரப்புரைகளை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இன்னும் முழுமூச்சாக ஆற்றியிருந் தனர். இந்தத்தடவை தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத் தையும், மகிழ்ச்சியுடன் கொண்டாடி அதன் நிழற்படங்களை ஊடகத் தர்ம த்துக்கு உட்பட்ட வகையில் முகநூலில் பகிரப்பட்டவைகள் முகநூல் நிறுவனம் அகற்றியதும். பலரின் முகநூல்கள் காலவரையின்றி முடக்கியும் இன்னும் வைத்திருக்கின்றது. இந்த நடவடிக்கையானது தமிழ்மக்களுக்கு வேதனையையும் இதற்கு எதிராகவொரு சட்ட நடவடிக்கையை தேடுகின்ற நிலைக்கு தமிழர்களை கூகுள் நிறுவனம் தள்ளி விட்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும். இலங்கைத் தீவிலே தற்பொழு ஆட்சியில் இருக்கும் கோத்தபாய அரசும், கோத்தபாயாவும் நேரடிக்கட்டுப்பாட்டில் அனைத்து இணையத்தளங்களையும் கையகப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு கூகுள் நிறுவனமும் துணைபோகின்றதோ என்றே எண்ணத்தோன்றுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here