மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணியாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனை!

0
367

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 41 பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டன.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் பொன்னாலை / மூளாய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட பல பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இன்று (01) காலை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைத்து மாதிரிகளை எடுத்தனர்.

இதன்போது மூளாய் கிராம உத்தியோகத்தரும் இங்கு பிரசன்னமாகியிருந்தார்.

பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு நாளைய தினம் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைநகரை சேர்ந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் என்பதால் மேற்படி பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிருந்தாபன் பொன்ராசா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here