பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் 2015

0
412

பிரான்சு மண்ணில் வீரச்சாவைத் தழுவிய கேணல் பரிதி, கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட போட்டிகள் 2015 பாரிசின் புறநகர்ப் பகுதியான ஓல்னே சுபுவா பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் கடந்த 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் திருஉருவப் படத்திற்கு அவருடைய பெற்றோரும் கப்டன் கஜன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அவருடைய சகோதரனும் , லெப்.கேணல் நாதன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இரண்டு மாவீரர்களின் சகோதரரும் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டது. கேணல் பரிதி அவர்களின் திருஉருவப் படத்திற்கு அவருடைய துணைவியாரும் மகளும், கப்டன் கஜன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அவருடைய சகோதரனும், லெப்.கேணல் நாதன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் திரு.நந்தகுமார் அவர்களும் அணிவித்தனர்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் சுரேஸ் அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், புலம்பெயர் மண்ணில் விடுதலைக்காகத் தமது உயிர்களை வித்தாக்கிய மாவீர்களின் நினைவாக இந்தப்போட்டிகள் இடம்பெறுகின்றன. எத்;தனையோ சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆனது மக்கள் பணியை முன்னெடுத்து வருகின்றது. இன்று இப்போட்டிகளில் பங்குபற்றும் கழகங்கள், போட்டியாளர்கள் ஒற்றுமையாக வெற்றிதோல்விகளை சமமாக ஏற்று தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுமுடிந்தன.

DSC04996

DSC_0007

DSC_0008

DSC_0013

DSC_0015

DSC_0017

DSC_0119

DSC_0096

DSC_0085

DSC_0032

DSC_0031

DSC_0028

DSC_0019

DSC05084

DSC05094

DSC05141

DSC05143

DSC05232

DSC05330

DSC05332

DSC05368

DSC05387

IMG_8028

IMG_8015

DSC05421

DSC05416

DSC05413

DSC05393

DSC05392

DSC05389

IMG_8030

IMG_8039

பங்குபற்றிய கரப்பந்தாட்ட அணிகள்:
ஈழம் றோயல் ஏ, ஈழம் றோயல் பி, நியூஸ்ரார் ஏ, நியூஸ்ரார் பி, பாடும் மீன் ஏ, பாடும் மீன் பி, காந்திஜி ஏ

பங்குபற்றிய உதைபந்தாட்ட அணிகள்:
பாடும் மீன் (மஞ்சள்), பாடும் மீன் (சிவப்பு), நல்லூர்ஸ்தான், செந்தமிழ், சென்பற்றிக்ஸ், மயிலிட்டி கண்ணகை, பாரதி, சென்மேரிஸ், வட்டுக்கோட்டை, தமிழர் வி.க. 93, யாழ்ற்றன், ஈழவர் , சென்கென்றிஸ், அரியாலை யுனைற்றற், சென்அன்ரனிஸ், மாஸ்டர்.
IMG_8055

IMG_8069

IMG_8078

IMG_8110

DSC05070 copy

போட்டி முடிவுகள்

கரப்பந்தாட்டம் (மேல் நோக்கி)
முதலாம் இடம் – காந்திஜி ஏ வி.க.
இரண்டாம் இடம் – நியூஸ்ரார் ஏ வி.க.
மூன்றாம் இடம் – ஈழம்றோயல் ஏ வி.க.

கரப்பந்தாட்டம் (ஒழுங்குபடுத்தல்)
முதலாம் இடம் – யாழ்ற்றன் வி.க.
இரண்டாம் இடம் – நியூஸ்ரார் வி.க.

உதைபந்தாட்டம் (13 வயதுக்குக் கீழ்)
முதலாம் இடம் – தமிழர் வி.க. 93
இரண்டாம் இடம் – பாடும் மீன் வி.க.

உதைபந்தாட்டம் (15 வயதுக்குக் கீழ்)
முதலாம் இடம் – செந்தமிழ் வி.க.
இரண்டாம் இடம் – நல்லூர் ஸ்தான் வி.க.
மூன்றாம் இடம் – பாடும் மீன் வி.க.

உதைபந்தாட்டம் (35 வயதுக்குக்கு மேல்)
முதலாம் இடம் – சென்அன்ரனிஸ் வி.க.
இரண்டாம் இடம் – சென்கென்றிஸ் வி.க.
மூன்றாம் இடம் – பாடும் மீன் வி.க.

உதைபந்தாட்டம் (இறுதி)
முதலாம் இடம் – தமிழர் வி.க. 93
இரண்டாம் இடம் – பாரதி வி.க.
மூன்றாம் இடம் – நல்லூர் ஸ்தான் வி.க.
IMG_8105

IMG_8092

IMG_8083

IMG_8080

ஊடகப் பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here