தமிழீழ தாயகத்தில் அளவெட்டி நகரைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரான்சு சென்டெனி பகுதியில் வசித்து கடந்த 22.11.2020 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த செயற்பாட்டாளர் அமரர் முருகையா புவனேந்திரன் அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளது.
அதுதொடர்பாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எம் வாழ்வும் வளமுமாய் எம்மோடு இணைந்த எம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இனிய தமிழ்க்கலைகளை, சீரிய தமிழ்ப்பண்பாட்டினை புலம்பெயர் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது என்ற உயர்சிந்தனையுடன் செயலாற்றிய பெருந்தகையின் மறைவுச்செய்தியறிந்து திகைத்துநிற்கின்றது தமிழ்ச்சோலைக் குமுகம்.
சென்-டெனி நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று முன்னின்று செயற்பட்டு, அதன் பொருளாளராக சிறப்புறப் பணியாற்றிய இவர், அதன்பின் சென்-டெனி தமிழ்ச்சோலை நிர்வாகியாகவும் அரும்பணியாற்றியவர்.
புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளுக்கும் வேலைச்சுமைகளுக்கும் மத்தியிலும் தமிழ்த்தேசியம் சார் அமைப்புகளுடன் தன்னை இணைத்து அயராது உழைத்த இவருக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்.ASSOCIATION TAMOULCHOLAI
165 Bd de la Villette75010 ParisFRANCE
இணையம்: http://tamoulcholai.frதொலைபேசி எண்: 09 84 06 38 83புதன் – ஞாயிறு : 14.30 -19.30
‘’நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்’’