நெவர் தமிழ்ச் சங்கத்துடன் நெவர் வாழ் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2020!

0
356

நெவர் தமிழ்ச் சங்கத்துடன் நெவர் வாழ் தமிழ் மக்களும் இணைந்து 27/11/2020 அன்று வெள்ளிக்கிழமை மாலை 1.32 மணிக்கு  மண்டபத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.இந் நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெரியோர்கள்எல்லோரும் கலந்து கொண்டனர்.

முதலில் பொதுச்சுடரினை திருமதி தங்க இரத்தினமம்மா அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து ஈகைச் சுடரினை திருமதி நிரோஷா அவர்கள் மாவீரர் லெப்.சங்கர் அவர்களின்  திருவுருவ படத்திற்கு சுடரினை ஏற்றி வைத்தார்.

அடுத்து ஏனைய மாவீரரின் படங்களுக்கு அவரவர் உறவினர்கள் சுடரினை ஏற்றி வைத்தனர்.பின்னர் அப்படங்களுக்கு ஒவ்வொருவராக மலர் அஞ்சலி செலுத்தினர். அடுத்து  அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ்ச்சோலை ஆசிரியர்களால் “மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே”என்னும் கீதம் இசைக்கப்பட்டது. பின்பு திரு இன்னாசியார் அவர்களால் மாவீரர் நாள் பற்றி சில குறிப்புகள் வழங்கினார்.அடுத்து மாவீரர் நினைவு சுமந்த எழுச்சி கானம் ஒலிக்க விடப்பட்டது. இறுதியாக மாலை 2.46 மணிக்கு “தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம் ” என்ற கோஷத்துடன் இந் நிகழ்வு   நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here