பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சார்சல் – 95 மாவட்டத்தில்
தமிழீழ விடுதலைப்போரிலே முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களுடைய நினைவுக்கல்லின் முன்பாக நடைபெற்றது.
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோவிட் 19 நோய்த்தொற்றினை கவனத்திற்கொண்டு அதற்கான சுகாதார வழிமுறைகளை கவனத்தில் கொண்டு அதனைக் கடைப்பிடித்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
13h15 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், தாயகச்செயற்பாட்டாளர்கள் இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர், மாநகரமுதல்வர், முக்கியஸ்தர்களோடு
13h15 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
பொதுச்சுடரினை மாவீரர் கடற்கரும்புலி மேஜர். ஈழவீரனின் சகோதரர் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.
பிரெஞ்சுத் தேசியக் கொடியினை சார்சல் மாநகரசபை முதல்வர் மதிப்புக்குரிய பற்றிக் கடாற் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை முந்நாள் சார்சேல் மாநகர முதல்வரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழர் விவகார ஆய்வு ஆலோசனை மையத்தின் உறுப்பினருமாகிய மதிப்புக்குரிய பிரான்சுவா பொப்பினி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து சரியாக 13:35 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டது. தொடர்ந்து 13:36 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் 13:37 மணிக்கு – துயிலுமில்லப்பாடல் இசைக்க ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை
மாவீரர் 2-ம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரரும், சார்சல் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமாகிய திரு. மத்தியாஸ் டக்கிளஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மலர் வணக்கம் இடம் பெற்றது.
லெப். சங்கர் அவர்களின் நினைவுத் தூபிக்கு மலர்மாலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் (மாவீரர் ) பிரிகேடியர். சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் புதல்வர் அணிவிக்க ஏனைய பிரமுகர்கள் மலர் வளையங்கள் வைத்து மதிப்பளித்தலைச் செய்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரன்சுவா பொப்பினி அவர்கள். சார்சல் மாநகர சபை பிதா திரு. பற்றிக் கடாற் அவர்கள் மாவீரர் கடற்கரும்புலி மேஜர். ஈழவீரனின் சகோதரர் அவர்கள். மாவீரர் 2ம் லெப். இளந்தேவன் அவர்களின் சகோதரர், திரு.மேத்தா அவர்கள் ( பரப்புரைப் பொறுப்பாளர் தமிழர் ஒருங்கிணைப்பு குழு). செல்வன். நிந்துலன் ( பொறுப்பாளர் தமிழ்இளையோர் அமைப்பு) ஆகியோருடன் பொதுமக்கள் மலர் வணக்கம் செய்திருந்தனர்.
நினைவு உரைகள் இடம்பெற்றன. உரைகளை முறையே திரு.மத்தியாஸ் டக்கிளஸ் அவர்கள் ( சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் ),
திரு.பற்றிக் கடாற் அவர்கள் ( சார்சல் மாநகர சபை முதல்வர் ),
திரு.பிரான்சுவா பொப்பினி (பாராளுமன்ற உறுப்பினர் ),
திரு.மேத்தா அவர்கள் (தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரப்புரைப் பொறுப்பாளர்)
செல்வன் நிந்துலன் (பொறுப்பாளர் தமிழ் இளையோர் அமைப்பு) ( பிரெஞ்சு மொழி உரை ) திரு. தசரதன் அவர்கள் (சார்சல் தமிழ்ச் சங்க செயலாளர் ) ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
கோவிட் 19 நடைமுறைகளைப் பயன்படுத்தி மக்கள் வணக்க நிகழ்வுகளைச் செய்தனர். அதனை சார்சல் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் நெறிப்படுத்தியிருந்தனர். நினைவேந்தல் இடத்திற்கு செல்லும் அனைவரும் வைரஸ் தொற்று அளக்கும் கருவியால் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொருவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட்டே உள்ளே அனுப்பிவைக்கப்பட்டனர்.
தேசியக்கொடிகள் முறையே இறக்கி வைக்கப்பட்டன
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தாரகமந்திரமாம் “ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’ உறுதியோடு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)