வவு­னி­யாவை அச்­சு­றுத்­திய கொள்ளைக் கோஷ்­டி­யினர் திக்­வெல்ல பிர­தே­சத்தில் மறைந்­தி­ருந்த போது கைது!

0
336

volவவு­னியா பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நிதி மற்றும் தங்க ஆப­ரண கொள்­ளைகள் பல­வற்­றுடன் தொடர்­புள்ள பிர­தான கொள்ளைக் கோஷ்டி ஒன்­றினைச் சேர்ந்த மூவரை பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். மாத்­தறை, திக்­வெல்ல பிர­தே­சத்தில் வைத்து, வவு­னியா தீர்க்கப் படாத குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வினர் இவர்­களைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. வவு­னி­யாவில் இருந்து சென்ற குறித்த பொலிஸ் பிரிவின் சிறப்புக் குழு­வினர் சந்­தேகநபர்­களின் மறை­வி­டத்தை கண்­டு­பி­டித்து இவ்­வாறு அவர்­களைக் கைதுசெய்­த­தாக ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் மேலும் குறிப்­பிட்­டது.

சந்­தேக நபர்­களைக் கைதுசெய்யும் போது அவர்­க­ளிடம் கைக்குண்டொன்றும் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அத­னை­விட கொள்­ளை­யி­டப்­பட்ட 8 பவுண் நகைகள் மற்றும் தொலை­பேசி ஒன்­றுடன் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்­றி­னையும் கைப்­பற்­றி­யுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

வவு­னியா பிர­தே­சத்தை நீண்ட நாட்­க­ளாக அச்­சு­றுத்தி வந்­துள்ள இந்தக் கொள்ளைக் கோஷ்டி தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள் வவு­னியா பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலை­யி­லேயே கைது செய்­யப்­ப­டாது இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள் ளும் பொறுப்பு வவு­னியா தீர்க்கப்படாத குற்ற விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கு மாற்­றப்­பட்­டது.
இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் நீண்ட நாட்­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த விசா­ர­ணை­களின் பல­னாக இந்த கொள்ளைக் கோஷ்டி கைதுசெய்­யப்­பட்­டுள்­ளது.
கைதுசெய்­யப்­பட்ட மூன்று கொள்ளை சந்தேகநபர்களும் வவுனியா நீதிவான் முன் னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here