
பூத்த நீறதைத்
தட்டி எழுவோம்
தடுமாற்றம் இல்லாத்
தடங்கள் பதித்துப்
போகும் காலம்
இதுதான் பாரும்…
நச்சு விதைகள்
முளைச்சதைக் காண
விதைச்சவர் முகங்கள்
வருவதைப் பாரும்…
வெஞ்சினம் வந்து
கண்களை மூட
கொதிக்கும் மனங்கள்
கோடியாய் இங்கே…
கார்த்திகை மாதம்
காட்டிய மெய்யதை
நினைச்சுப் பார்ப்போம்
ஆறாம் நாளில்….
விடுதலை வேண்டும்
சொன்னவர் பலரில்
வந்தவர் எல்லாம்
எங்கே போயினர்…
கொண்ட கொள்கையை
அடைவாய் வைத்து
வாழ்ந்தவர் இப்போ
வருவதைப் பாரும்…
வஞ்சகர் வலையில்
விழுந்த அவர்கள்
நஞ்சென முளைப்பதில்
அதிசயம் இல்லை…
நன்றி கெட்ட
நச்சுச் செடிகள்
நமக்குள் இருப்பது
முறையா சொல்லும்
வெஞ்சினம் கொண்டு
பொசுக்க வேண்டும்
வாருங்கள் அதற்காய்
ஒன்றாய்ச் சேர்வோம்….
வேலணை மண்ணில்
நடந்ததைப் பார்க்க
நரகத்தில் இருவர்
இருப்பதைக் கண்டோம்…
தியேட்டரில் இருந்து
கதைச்சவர் கூடப்
புதுப்படம் காட்ட
முயன்றதைப் பார்த்தோம்…
பேரினில் சுதந்திரம்
வைச்ச கட்சியின்
மன்றத்தில் இருப்பவர்
புலம்பலைக் கேட்டோம்….
காவல் காப்பதாய்
சொல்பவர் வந்து
கக்கிய நஞ்சதை
(அ) நீதி மன்றினில்ப்
பார்த்ததைக் கூட
மறப்பது முறையோ…?
கிழக்கால போன
கூட்டம் கூட
ஊழையிடுவதைப்
பார்த்த பிறகு….
நீறதைத் தட்டி
நெருப்பாய் மாறும்
காலம் இதுவெனக்
காண்க உறவே….
இறையோன் எமக்காய்ப்
பிறந்த நாளினில்..
இருக்கும் அவனின்
நெஞ்சங்கள் எல்லாம்
சிலிர்த்து எழுக….
எம்மைக் காக்க
எமக்காய் வாழ்ந்த
எங்களின் உறவை
எண்ணிப் பார்க்க…
எரியும் தீபம்
ஏற்றித் துதிக்க
எவனடா எமக்குத்
தடையது சொல்வது…
வந்தவர் நீங்கள்
வாழ்ந்த எம்மைக்
கெடுப்பதற்காக…
விதைச்ச செடிகள்
விசத்தைக் கக்கித்
தாங்கள் ஆரெனக்
காட்டி விட்டது….
இதுக்குப் பிறகும்
இந்தச் செடிகள்
எங்கள் மண்ணில்
எப்படி இருக்கும் ….?
நல்ல நாற்றுக்குள்
கழையதை எடுத்துக்
காக்கும் எமக்குள்
இந்தப் பிறவிகள்
இருப்பது முறையோ….?
அதனால்
இந்த நாளில்
உறுதி எடுப்போம்
நச்சுச் செடிகளைப்
பிடுங்கி எறிந்து
அடுத்த தலைமுறை
நன்மையைக் காண..
நச்சுச் செடிகள்
அழித்திட வேண்டும்
அதனை எண்ணிப்..
புறப்பட்டு வாரும் …
பூத்த நீறதைத்
தட்டி எழுவோம்….
நச்சுச் செடிகள்
நமக்குள் எதுக்கு….?
எங்கள் இறையே
துணைக்கு வா….
இவர்களை அழிக்க
இந்த நாளினில்த்
துணைக்கு வா….
மீண்டும் ஒருமுறை
காட்சி தா….!
இன்றைக்குத் தானே
உன்….
பிறந்த நாளதும் -அதனால்
மீண்டுமொருமுறை காட்சி தா….
எரிமலைக்காக யேர்மனியில் இருந்து றோய் மதி . 26.11.2020