மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தி பிரான்சு திரான்சி நகரசபை முதல்வர் திருமதி Aude Lagarde அவர்கள் உரை!

0
410

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாளை முன்னிட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தி பிரான்சு DRANCY திரான்சி நகரசபை முதல்வர் திருமதி Aude Lagarde அவர்கள் வழங்கிய சிறப்புக் காணொளி உரை.


27 நவம்பர் 1982 , Lt. சங்கர் அவர்கள் சிங்கள இராணுவ படையினருக்கு எதிராக போரிட்டு களத்தில் முதல் மாவீரராய் உயிரிழந்தார் .

மிகவும் உணர்வு பூர்வமாக, Drancy நகரபிதா ஆகவும் , எங்கள் நகர சபை உறுப்பினர்களின் சார்பாகவும் , ஒட்டுமொத்த Drancy மக்களின் சார்பிலும் , விடுதலைக்காகவும் தனிநாட்டுக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த 30 000 மாவீரர்களை   நினைவுகூரும் இந்த மாவீரர் நாளில் இணைந்து கொள்கிறேன்.

எங்களின் ஆதரவு , இந்த 2020ஆம் ஆண்டில் மிகவும் முக்கியமானது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை அரசாங்கம் , 2015 ஆம் ஆண்டு ஐ நா சபையின் மனித உரிமை ஆணையகத்தில் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகள் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மீண்டும் வலியுறுத்தப்பட்டே இருந்தது.

2009 ஆம் ஆண்டு 58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஒருவரை ,  சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காய் ஐநா விசாரணைகளுக்கு பலமுறை உள்ளான ஒருவரை,  இலங்கை படைத்தலைவராக நியமிக்கப்பட்டமை மிகவும் துயரமான சம்பவம் என 2019 இலிருந்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் மிசல் பச்சலே ( Michelle Bachelet ) அவர்கள்.

முக்கியமாக 30 வருடங்களுக்கு மேலாக நடந்த போரில் மக்கள் மேல் நடாத்தப்பட்ட கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவேண்டும்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

மேலும் சிறீ லங்காவில் மதகலவரங்கள்,  அரசியல் வன்முறைகள், ஒடுக்குமுறைகள், கண்மூடித்தனமான கைதுகள், தமிழர் நிலங்கள் இராணுவ மயமாக்கல் என்பனவை நிறுத்தப்படல் அவசியம்.

சிறீ லங்காவில் தமிழ் மக்கள் படும் துன்பத்தினை சர்வதேச அரங்கில் வெளிக்கொண்டு வரவும் சர்வதேசத்தின் பார்வையை எங்கள் மீது திரும்பச் செய்யவும் நாங்கள் பலம்மிக்கவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  

எனக்கு நம்பிக்கை இருக்கிறது ,

இக்கடுமையான உள்ளிருப்புச் சூழலிலும் , தீவிரவாத ஆபத்துகளிலும் , நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடக்கூடாது. மாறாக எங்களின் சுதந்திர குடியரசின் மீதானதும் பாடசாலைகள் வரை தொடருகின்றதுமான தீவிரவாத அச்சுறுத்தல் எம்மை நிலை குலையச் செய்யாமல் மேலும் உறுதிடையச்செய்ய வேண்டும்.

இன, மத , அரச ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து, இன்று நீங்கள் நினைவுகூரும் மாவீரர்களின் தியாகம் அழிந்து போகாமல் இருக்கவும், மிகவும் தொன்மை வாய்ந்த தமிழரின் அடையாளமும், பண்பாடும் உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கப்படவும் நாங்கள் உங்களோடு முழுமையான சகோதரத்துவத்துடன் இணைந்து நிற்கின்றோம்.

https://www.youtube.com/watch?v=BSB_AYNYeME

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here