பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய நினைவேந்தலுக்கு காவல்துறை அனுமதி!

0
596


உண்மையும், சத்தியமும், இலட்சியமும் ஒருநாள் வெற்றியைப் பெற்றேதீரும்!
கடந்த வாரம் லாச்சப்பல் பகுதியில் பாரிஸ் 10 வட்டாரத்தின் காவல்துறையின் துணையோடு சிலர் செய்த நடவடிக்கைகள் தமிழர்கள், மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் உண்டு பண்ணியிருந்தது. கடந்த ஆண்டு முதல் ஆரம்பித்த இந்த உண்மைக்கும், நியாயத்திற்கும் முரணான இச்செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக தமிழர் கட்டமைப்புக்கள் மேற்கொண்ட சட்ட நடிவடிக்கையால் 25.11.2020 இன்று காலை 10.00 மணிக்கு காவல்துறை அதிகாரிகள் சந்திப்பதற்காக அழைத்திருந்தனர். வழக்கறிஞர் ஊடாக காவல்துறை அதிகாரியுடன் பேச்சுக்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் கலந்து கொண்டு எமது தரப்பின் விடயங்கள் எடுத்துக் கூறியிருந்தனர். பரிஸ் 10 காவல்துறை தலைமைப் பொறுப்பதிகாரி தமிழ்மக்களுடைய தேசியத்தலைவரின் படத்திற்கோ, அதன்சின்னத்திற்கோ அவர்கள் ஒட்டிய பிரசுரத்திற்கும் எந்தத் தடையும் இல்லை என்றும் இவ்வாறு நடைபெற்றமை பொறுப்பற்றதொரு செயற்பாடு என்று கூறியதோடு மட்டுமல்லாது தமது தலைமை அலுவலகத்துடனும் தொடர்பு கொண்டு எதற்கும் தடையில்லை என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார் என்பதைத் தெரிவித்திருந்தனர்.
தற்சமயம் ஒரு நாள் அகற்றப்பட்ட சில மாவீரர்நாள் பிரசுரங்கள், இன்று பல துண்டுப்பிரசுரங்களாக அனைத்து வர்த்தக நிலையங்களிலும் ஒட்டப்படுகின்றன. தமிழீழ மக்கள் எதிர்பார்த்ததற்கு அமைவாக தமிழீழத்தேசிய தலைவர் மாவீரர்களுக்கு ஒளியேற்றும் நிழற்படத்துடன் புதிய பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர். அனைத்து வர்த்தக நிலையங்களிலும் செயற்பாட்டாளர் ஒட்டிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அதேவேளை எமது தேசத்தின் நினைவுகளை எமது மக்களோடு பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளை லாச்சப்பல் பகுதியில் செய்வதற்கு பிராான்சு உள்நாட்டமைச்சின் காவல்துறை அனுமதியை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய தலைவரின் 66 ஆவது அகவை லாச்சப்பல் பகுதியில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நாளை 26.11.2020 வியாழக்கிழமை பி. பகல் 2.00 மணிமுதல் 5:00 மணிவரை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. மக்கள் கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைப்பேணி முகக்கவசம் அணிந்து (Masque) நோய்க்கிருமி அழிக்கும் மருந்து பாவித்து கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here