மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக வட மாகாண அமைச்சரொரு வருக்கு முன்னாள் போராளியொருவர் கடித மொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வட மாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே முன்னாள் போராளி ஒருவர் வட மாகாண அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் முன்னாள் போராளிகளான 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது, ஜோடி களுக்கு தங்கச் சங்கிலியும் பரிசளிக்கப் பட்டது. தங்கச் சங்கிலிகள் என்று அன்று வழங்கப்பட்ட நகைகள் பித் தளை எனவும் அவை, சில மாதங் களிலேயே கறுத்துவிட்டன என்றும் முன்னாள் போராளி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தவிர தங்களுக்கு குடியிருப்பு காணி, வீடு, வாழ்வாதாரம் என்பன ஏற்படுத்தித் தரப்படும் என திருமணத்தின் போது கூறப்பட்ட போதும், எவ்வித உதவிகளும் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், வட மாகாண சபை தங்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.