ஓ நெஞ்சமே…….
இவை கற்குவியல்களல்ல,
பூக்களை விட மென்மையான
தூய நெஞ்சம் கொண்ட
நம் காவல் தெய்வங்கள் கண்ணயர்ந்து
தூங்குமிடம்…….,
நாளை,
நம் கனவுகள் கருத்தரித்து
விடுதலை எனும் சிசுவாக
வீரப்பிரசவம் பெறும்
புனிதக்கருவறைகள் இவை.
வாருங்கள்….
ஓரணியாய் நின்றவரை தொழுதுசெல்வோம்…
ஒன்றாக நின்றுழைத்து
இவர்தம்
ஆன்ம தாகம் தீர்ப்போம்……..
- கிருபாகரன் மருசலீன்.