தூபி உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில் மாணவர்கள் முகங்கள் அனைத்திலும் ஒரு பெருமிதம். அந்தக்காலங்களில் இந்துக்கல்லூரி மாணவன் என்றாலே ஒரு பெருமை, யாழ்ப்பாணத்தில் நடக்கும் அனைத்து மாணவர்போராட்டங்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தலமையில்த்தான் நடக்கும், அது ஒரு அழகான காலம்.
அதன்பின் ஏற்பட்ட போர்ச்சூழலில் ஒரு மழைநாளில் தட்டாதெரு இராணவ காவலரனில் இருந்து ரோந்து வந்த இராணுவத்தினரால் நமது மாவீரார் தூபி உடைக்கப்பட்டது, கெல்மெட் ஆறுமுகநாவலரின் தலையிலும் சப்பாத்து கல்லூரி கதவின் மேல் இரும்பிலும் பொருத்தப்பட்டிருந்தது.
அதன்பின்னரான மாணவர் போராட்டங்கள் இராணுவம் கல்லூரிவீதியினால் ரோந்து செல்வதையே தடுத்து நிறுத்துமளவிற்கு சென்றது எல்லாம் வரலாறு…
மாவீரம் தந்த கல்லூரித்தாய்
தகவல் : யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகநூல் பக்கம்