கொத்துக்குண்டுகளால் பிஞ்சுகள் குருதி சிந்திய மண்ணிலேயே கட்டடங்கள் திறக்கப்படுகின்றன: சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

0
152

viki-3-680x365கொத்­துக்­குண்­டு­களையும் எறி­க­ணை களையும் வீசி எமது பிஞ்­சுகள் குலை, குலை­யாக அறுத்து நிலத்தில் வீழ்த்­தப்­பட்டு அவர்­களின் உட­ல்­களில் சிந்­திய குரு­தி­யினால் சிகப்­பே­றிய மண்ணில் தான் இன்று பாட­சா­லைக் ­கட்­ட­டடம் திறக்­கப்­ப­டு­கின்­றது என வடக்கு மாகா­கண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.
கிளி­நொச்சி மலை­யா­ள­புரம் அன்னை சாரதா வித்­தி­யா­ல­யத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­ட­ட­டத்­தொ­கு­தி­யினை திறந்து வைக்கும் நிகழ்வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977ம் ஆண்டு மற்றும் 1983 இல் நடைபெற்ற இ­னக்­க­ல­வ­ரங்­களால் மலை­ய­கப்­ப­கு­தி­க­ளி­லிருந்து இடம்­பெ­யர்ந்து வந்த மிகப்­பெ­ரு­ம­ள­வான மக்கள் கிளி­நொச்சி மலை­யா­ள­புரம் பார­தி­புரம், கிருஷ்­ண­புரம், ஆகிய பகு­தி­களில் குடி­ய­மர்ந்­தனர்.
இவர்­க­ளு­டைய பிள்­ளை­க­ளின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பார­தி­பு­ரத்­திலே பார­தி­ வித்­தி­யா­லயம் என்ற பாட­சாலை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் ஆயிரம் பாட­சா­லைத்­திட்­டத்தின் கீழ் அதன் உடைய ஆரம்­பப்­பி­ரிவு தனி அல­காக இயங்க வேண்­டிய சூழ்­நி­லைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.
ஆரம்பப் பிரிவை வேறொரு இடத்தில் தனி­யாக இயக்கும் வகை­யி­லேயே குறித்த பாட­சாலை அமைக்­கப்­பட்­டுள்­ளது எனத்­தெ­ரி­வித்­துள்ள வடக்கு­ மா­காண முத­ல­மைச்சர் 2006ஆம் ஆண்டு 2009ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தி­யி­லேயே இப்­ப­கு­தியில் 120 பாட­சாலைப் பிள்­ளைகள் கொத்­துக்­குண்­டுகள் மூல­மா­கவும் எறி­க­ணைகள் மூல­மா­கவும் கொன்று குவிக்­கப்­பட்­டனர் எனவும் 200 பிள்­ளை­கள் தாய் அல்­லது தந்­தையை அல்­லது இரு­வ­ரையும் இழந்­த­வர்­க­ளா­கவும் முப்­ப­திற்கு மேற்­பட்ட சிறு­வர்­களின் நிலை என்­ன­வென்று தெரி­யாது என்றும் இஙகு கூறி­யதை நான் அறிந்­தி­ருக்­கின்றேன்.
கொத்­துக்­குண்­டுகள் மூலமும் எறி­க­ணைகள் மூலமும் எமது பிள்­ளைகள் குலை­கு­லை­யாக அறுத்து நிலத்தில் வீழ்த்­தப்­பட்டு அவர்­களின் உடலில் சிந்­திய இரத்­தத்­தினால் சிவப்­பே­றிய மண்ணில் தான் இன்று 150 அடி நீளத்­தையும் 25 அடி அக­லத்­தையும் கொண்ட ஆறு வகுப்­ப­றைகள் அதிபர் அலு­வ­லகம், கணினி அறை என்­பன திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here