புடையன் பாம்பு தீண்டி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (22) காலை சிகிச்சைகளை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
நேற்று முன்தினம் இரவு அவரது அலுவலக மலசலகூடத்தின் கதவிலிருந்த பாம்பு, அவரது கையில் தீண்டியிருந்தது.
இதையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடித்த பாம்பை அடையாளம் காண வைத்தியசாலை நிர்வாகம் விரும்பியதையடுத்து, அலுவலக மலசல கூடத்தில் தேடிய போது புடையன் பாம்பு பிடிக்கப்பட்டது.
பின்னர் சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பிடிக்கப்பட்ட பாம்பு கண்ணாடி போத்தலில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கொல்லப்பட்டது.
24 மணித்தியால மருத்துவ கண்காணிப்பில்- நேற்று இரவு வரை இருந்த சிவாஜிலிங்கம், பூரண நலமடைந்த நிலையில் இன்று காலை வைத்தியசாலை நிர்வாகத்தினால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.