மலசலகூட குழியொன்றில் விழுந்து பெண்ணொருவர் பலியானதுடன் அவரை காப்பாற்றச் சென்ற மூன்று ஆண்கள் விஷ வாயுவை சுவாசித்து உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ரம்புக்கனை – மீதெனிய-பரதே என்னும் இடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மேலும் நான்கு ஆண்கள் சுவாசப்பாதிப்புக்குள்ளாகி
கேகாலை, ரம்புக்கனை ஆகிய வைத்திய சாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதான ஹர்சன குமாரி என்ற பெண் ணும் 44 வயதுடைய சரத்காமினி எதிரிசிங்க
,38 வயதான ஆனந்த பிரேமரத்ன,
55 வயதுடைய சுனில் ஜயரத்ன ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
நேற்றுக்காலை கொங்ரீட் மூடப்பட்ட மலசலகூடக் குழிக்கு மேலால் ஹர்சன குமாரி என்ற குடும்ப பெண் நடந்து சென்றுள்ளார் இதன்போது கொங்கிரீட் உடைந்து அதனுடன் சேர்ந்து அப்பெண்னும் மலசலகூட குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து அப் பெண்ணை காப்பாற்ற அயலவர்கள் அவ்விடத்துக்கு வந்துள்ளபோது மலசலகூட குழிக்குள் இருந் து வெளியான மலசலகூட விச வாயுவை அவர்கள் சுவாசித்துள்ளனர்.இதன் காரணமாக மலசலகூட குழிக்குள் விழுந்த பெண்ணும் அவரை காப்பாற்றச் சென்ற மூன்று ஆண்களுமாக 4 உயிரிழந்துள்ளனர்.
விசவாயுவின் தாக்கத்திகுள்ளான மேலும் 4 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.