பிரான்சில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இன்று (21.11.2020) சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரான்சு நாட்டின் அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.