மாவீரர் நாள் தடைக் கோரிக்கையை நிராகரித்த மல்லாகம் நீதவான்!

0
206

மாவீரர் நாள் தடைக் கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் காவல்துறையின் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், அவர்களைக் கைது செய்யுமாறு அவர்களுக்குப் பணித்தும் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் நேற்று (20) மாலை கட்டளை வழங்கினார்.

மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை காவல்துறை பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் (19) காங்கேசன்துறை காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது “காவல்துறையினால் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும், இலங்கை வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறினால் மீறுபவர்களை கைது செய்யமாறும்” நீதிவான் தனது கட்டளையில் குறிப்பிட்டார்.

அத்துடன் பொதுக் கூட்டங்களை நடத்துவதனால் பிரதேச பிரிவின் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

மனுவில் குறிப்பிடப்பட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இலங்கையின் சட்ட திட்டங்களை மீறமாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here