முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது திட்டமிட்டு அவரைப் படுகொலை செய்வதற்காக செய்யப்பட்ட செயலா எனப் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்தவாரம் ஊடகவியலாளர் சந்திப்பில் எத்தடை வரினும் மாவீரர் நாள் நினைவேந்தலைச் செய்வேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.