தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் டி. என். ஏ. அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதென இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ சந்தேக நபர் களை ஜுலை 3 ஆம் திகதி வரை விளக் கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.