உதவுவதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை!

0
499

உலக பணக்காரர் கணினி உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்கிறார் உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?”

ஆம். ஒருவர் இருக்கிறார் பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்.

நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே, அதை விடுத்தேன். அப்போது ஒரு கருப்பினச் சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் பிரதியைக்கொடுத்தான்.

என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.

மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்

ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

19 வருடங்கள் கழிந்தன
நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.

ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன். அவனைக் கேட்டேன்.

என்னைத் தெரிகிறதா
தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ்பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன் தற்போது அதற்காகநீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது.”என்றான் அந்தக் கருப்பு இளைஞன்….

ஏன் ? என்றேன் நான்.
அந்த இளைஞன் நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் கொடுத்தேன் ஆனால் நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்

ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் என்றான். கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்பதை உணர்ந்தேன் என்றார்

பில்கேட்ஸ்.
கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்வேண்டுமென்பதோ பணக்காரன் ஆகும்வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது.

(முகநூலில் இருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here