வவுனியாவில் காட்டுயானைகள் அட்டகாசம்: பயன்தரு மரங்கள் நாசம்!

0
303

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனைக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் இன்று (17) செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரவேசித்த யானைகள், பயன் தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அதேவேளை வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், தற்போது பகல் நேரங்களிலும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பயன்தரும் மரங்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், கிராமத்தை யானைகள் ஆக்கிரமித்து வருவதால் தாம் தமது சொந்த கிராமத்தில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை உருவாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் நிரந்தரமாக விவசாயம் செய்து நிம்மதியாக வாழ்வதற்கு தமது கிராமத்தை சுற்றி யானைகளுக்கான மின்சார வேலியை அமைத்து தருமாறு  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here