பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பலகாமம், மாமுனை ஆற்றுப் பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் இன்று (15) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வேண்டி விட்டு வாள் வெட்டுக்கு இலக்கான நபர் தம்பலகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை நோக்கி பயணித்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குணசிங்கம் (வயது-43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.