கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் சிறிலங்கா காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
எதிர்வரும் 27ஆம் திகதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நாள் என்பதால் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் தெரியவருகையில்,
இன்று காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்புரவுப் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் வேளமாழிகிதன் உள்ளிட்ட பலரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி காவல்துறையினர் , சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாது செயற்படுவதாகவும் துப்புரவுப் பணிக்கு அனுமதி வழங்கியது யார் எனவும் வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஏனையோரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன் சுகாதார நடைமுறையினை பின்பற்றி துப்புரவுப் பணியினை தொடர்ந்தும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.