பிரான்ஸில் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு!

0
725

பிரான்ஸில்  எதிர் வரும் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனாத் தொற்றுப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி பொது முடக்கத்தை அறிவித்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஜனாதிபதியுடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பின் 2ஆவது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here