கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களுடன் படங்களை பதிவிட்டமை தொடர்பில் கடுகன்னாவையை சேர்ந்த ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான இடுகைகளை பகிர்ந்து வரும் மேலும் நால்வர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது .
குறித்த செய்தியை பல ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான தகவல்களை ஆராயாமல் தகவல்களை ஊடகங்கள் வெளியிடவேண்டாம் எனவும் கேட்கப்பட்டுள்ளது.