சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தலில்: ஆதரவற்றோர் அவலம்!

0
513

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றும் இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து வல்வெட்டித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சிரமத்தில் 5 பேர் மட்டும் தங்கியுள்ள நிலையில் அவர்கள் வெளியில் வருவதற்கோ வெளியிலிருந்து யாராவது உள்ளே செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு யாரும் செல்லமுடியாது .எனவே உறவுகளால் கைவிடப்பட்டு சந்நிதியான் ஆலய வாசலில் தங்கியிருக்கும் முதியவர்கள் நிலை பரிதாபம். பல வருடங்களாக அநாதரவான முதியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமம் பல உதவித்திட்டங்களை முதியவர்களுக்கு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது . தற்போது சந்நிதியான் அன்னதான ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஆச்சிரமத்திற்கு சென்று அவர்கள் தங்கள் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்யமுடியாது. எனவே இந்நிலையை உணர்ந்து அந்த முதியவர்களுக்கு உன்னத மனித நேயப்பணிகளை சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகள் முன்னெடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி முதியவர்களுக்கு உரிய உணவு வசதிகளை சந்நிதி கலாமன்ற இளைஞர்கள் ஒழுங்கமைத்துள்ளார்கள் எனவும் –

நாளை முதல் அவர்களுக்குரிய உணவு மற்றும் தேநீர் என்பன உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்படும் எனவும் – அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here