இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களின் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து மீன்களை அனுப்பும் குறித்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவார காலத்திற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.