கிளிநொச்சியில் தற்காலிக வீட்டுச்சுவர் வீழ்ந்து சிறுவன் பலி!

0
142

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் தற்காலிக வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

நேற்று (12) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், நிரோஜன் றுசாந்தன் எனும் சிறுவனே பலியாகியுள்ளான்.

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக அங்கு  வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து வீழ்ந்துள்ளது.

குறித்த சிறுவனின் தாய் உணவு தயாரித்துக்கொண்டிருந்ததாகவும், சம்பவத்தில்  உயிரிழந்த சிறுவன் உணவு உட்கொண்டிருந்துள்ளதாகவும், அவ்வேளையில் திடீரென வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். எனினும். வைத்தியசாலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கடந்த அரசின் காலத்தில் வீட்டுத்திட்டம் கிடைத்தும் அதனை பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கான முழுமையான பணம் வழங்கப்படவில்லை.இதனால் அந்த குடும்பத்தால் நிரந்தர வீட்டுக்கு செல்ல முடியாது போய்விட்டது என அயலவர்கள் கண்ணீரோடு தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here