பிரான்சில் நொசி லு செக் பகுதியில் கடந்த ஒக்ரோபர் மாதம் 3 ஆம் திகதி தந்தையின் கோரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகள் மற்றும் தாயார் ஆகியோரின் இறுதி நிகழ்வுகள் அனைவரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 33 Rue de la Fontaine, 93130 Noisy-le-Sec பகுதியில் இடம்பெற்றன.
கடந்த வாரம் இதே பகுதியில் ஏனைய இரண்டு சகோதரர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் கோரச் சம்பவத்தில் தாயாரான நிரோஜினி (வயது 30), பிள்ளைகளான நிரோஜன் ( வயது 05 ), கஜனி (வயது 01) மற்றும் சகோதரர்களான கிஷோர்(வயது 11),வீரா (வயது08) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.