கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான “மிங்க்” வகை கீரிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
மிங்க் பண்ணைகளில் வேலை பார்த்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது நாட்டில் உள்ள ஆயிரத்து 139 பண்ணைகளில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 இலட்சம் “மிங்க்” கீரிகளைக் கொல்ல டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த உயிரினத்தைக் கொன்று புதைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய மிங்க் வகை கீரிகளை உற்பத்தி செய்யும் நாடாக டென்மார்க் உள்ளது. அவை சீனா மற்றும் ஹொங்கொங் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டென்மார்க் உட்பட நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளின் கீரிப் பண்ணைகளில் கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.