பிரான்சில் புதிய கட்டுப்பாடு:கொரோனா ஏற்பட்டாலோ தொற்று நபருடன் இருந்தாலோ கட்டாய தனிமை!

0
230

covid-19 தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ அல்லது தொற்று நோய் ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலோ தனிமைப்படுத்தல் அவசியம் என்று அக்டோபர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால், Europe 1 வானொலியில் வழியான தகவல்களின்படி அரசாங்கம் இப்பொழுது இந்த நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெற இருக்கும் மந்திரிசபைக் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் ஆறு லட்சம் யூரோ வரை அபராதம் விதிக்கப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் 5000யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் பத்தாயிரம் பவுண்டாக இந்தத் தொகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

agir ensemble என்ற அமைப்பின் தலைவர் Olivier becht தனிமைப்படுத்தல் நடவடிக்கையை கடைப்பிடிக்காதவர்களுக்கு பத்தாயிரம் யூரோ வரை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டிருந்தார்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

ஆனால் இந்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தண்டப்பணம் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.

அருண் சண்முகலிங்கம்.

(நன்றி:தினக்குரல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here