மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமைச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் மாமனிதரின் திரு உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.