நேற்று (10) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 430 கொரோனா தொற்றாளர்களில் புறக்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 82 சிறிலங்கா காவல்துறையினர் உள்ளடங்குவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இதுவரை 145 விசேட அதிரடிப் படையினர் (STF) உள்ளிட்ட 612 சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் போகம்பறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலையில் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையைச் சேர்ந்த 19 சுகாதாரப் பிரிவு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றையதினம் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஆகக் கூடுலாக கொள்ளுபிட்டியில் 55 பேரும், மருதானை மற்றும் மாளிகாவத்தையில் தலா 20 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை சிறிலங்காவில் கொரோனா உயிழப்பும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்கா அரசு தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.