இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 40 ஆக உயர்வு!

0
438

இலங்கையில் 04 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

1) ராஜகிரியவைச் சேர்ந்த 51 வயது ஆண். இவர் 07.11.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். இவருக்கு கொரோனாவுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

2) கொழும்பு- 10 இல் வசிக்கும் 45 வயது ஆண். அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இறந்தார். சுவாச தொகுதியில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக இறந்தார்.

3) கம்பஹாவில் உள்ள உடுகம்பொலா பகுதியில் வசிக்கும் 63 வயது பெண். அவர் 09.11.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். மரணத்திற்கு முக்கிய காரணம் கொவிட் அதனுடன் நிமோனியா காய்ச்சல்.

4) 55-60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண். பிரேத பரிசோதனைக்கு உடல் 08.11.2020 அன்று பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கொவிட்-19 இனங்காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here