யாழில் பரவும் உண்ணிக் காய்ச்சல்: யாழ். போதனா பிரதி பணிப்பாளர் அறிவுறுத்து!

0
218

உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“தற்போது உண்ணி காய்ச்சல் என்ற ஒரு பக்றீரியா காய்ச்சலும் ஏற்படுகின்றது. இந்த காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் மிக முக்கியமானது. குறிப்பாக இந்த காய்ச்சல் தொடர்பில் யாழ் மாவட்டம் – கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலங்களில் அவதானித்தேன்.

பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பார்கள். அதாவது வயல் வேலை செய்பவர்கள் தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக அறுவடைக் காலங்களிலும் பலர் உண்ணி காய்ச்சலினால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். உண்ணிகாய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுகின்றது. இது பொதுவாக தெள்ளினால் பரப்பப்படுகின்றது. பொதுவாக எலி, அணில், நாய், பூனை மற்றும் மிருகங்களின் காணப்படலாம்.

தெள்ளு உடலில் கடித்து அந்த கிருமி உடலுக்குள் செல்வதால் இந்த நோய் ஏற்படுகின்றது. இதன்போது காய்ச்சல் , உடல் நோ காணப்படும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சையினை நோயினை இனங்கண்டு உடனடியாகவே அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுவதேயாகும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here