மாமனிதர் ந.ரவிராஜ் அவர்களின்
14ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரியிலுள்ள அவரின்
உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார் என யாழ். ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவர்கள் கடந்த 2006 ஆம்
ஆண்டு கொழும்பு நாரஹன்பிட்டியில் சுட்டுப்
படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.