தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.-
அத்துடன், அமெரிக்க பொதுமக்களுக்கான கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் எனவும், முகக்கவசங்களை அணியுமாறு வலியுறுத்தப்படும் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருளாதாரம், நிறவெறியைக் கட்டுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பிலும் தனது பதவிக் காலத்தில் அவதானம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.