நந்திக்கடலின் வளங்கள் சூறையாடப்படுகின்றன தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுங்கள்: ரவி­க­ர­னிடம் முல்லை மக்கள்!

0
210

ravikaran-mullai11வெட்­டு­வாய்க்கால் நந்­திக்­க­டலில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் மேற்­கொள்­ளப்படும் தடை­செய்­யப்­பட்ட தொழில் முறை­களை நிறுத்தி எமது வாழ்­வா­தா­ரத்தைக் காப்­பாற்­றுங்கள் என வட­மா­காண சபை உறுப்­பினர் துரை­ராசா ரவி­க­ர­னிடம் முல்லை கரை­யோரக் கிரா­மங்­களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
வட­மா­காண சபை உறுப்­பினர் து.ரவி­க ரன் இல்­லத்தில் கள்­ளப்­பாடு, சிலா­வத்தை, மணற்­கு­டி­யி­ருப்பு, வண்­ணாங்­குளம், செல்­வ­புரம் ஆகிய கரை­யோரக் கிரா­மங்­களைச் சேர்ந்த மக்களுக்கிடையில் சந்­திப்­பொன்று நடை­பெற்­றி­ருந்­தது.
இதன்­போது, தொடர்ந்­து­வரும் சட்­ட­வி­ரோ­தி­களின் முறை­யற்ற மீன்­பிடி முறை­களால் ஆண்­டாண்டு காலம் வீச்சுத் தொழி­லையே நம்­பி­யி­ருக்கும் தம் மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

தடை­செய்­யப்­பட்ட வலை­களும் கிபிர்­கூடு என்று சொல்­லப்­படும் கூடு­களும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வெட்­டு­வாய்க்கால் நந்திக் கடலின் வளம் சூறை­யா­டப்­பட்டு வருதல் தடுத்து நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அதன் மூலம் நாளாந்த வரு­மா­னத்தைக் கொண்டு எம்­வாழ்க்­கையை முன்­னெ­டுக்கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வீச்சுத் தொழி­லா­ளிகள் மீதான நெருக்­க­டிகள் களை­யப்­ப­ட­வேண்டும் எனக் கோரினர்.
இவ்­வாண்டு முழு­வதும் தொழில் செய்­யக்­கூ­டிய வகையில் இறால் குஞ்­சுகள் பெரு­கி­யி­ருக்­கின்­றன. நாளாந்தம் இரண்­டா­யிரம் மூவா­யிரம் அளவில் அனை­வரும் உழைத்த நிலையில் தற்­போது உள்­ளூ­ரிலும் வெளி­யூ­ரிலும் உள்ள சிலர் சட்­ட­வி­ரோ­தத் ­தொ­ழிலை முன்­னெ­டுப்­பதால் வீச்சுத் தொழில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது. போதி­ய­ளவு வரு­மா­னத்­தினைப் பெறத் தவறும் வீச்சுத் தொழி­லா­ளி­களின் நாளாந்த வாழ்க்­கையும் கேள்­விக்­குள்­ளா­கின்­றது எனவும் சுட்­டிக்­காட்­டினர்.
மக்கள் பிர­தி­நி­தி­களின் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்த வட­மா­காண சபை உறுப்­பினர் து.ரவி­கரன், நன்னீர் மீன்­பி­டி­யா­னது வட­மா­காண சபை-யின் கட்­டுப்­பாட்­டுக்குள் வரு­கின்­றது. சட்­ட­வி­ரோதத் தொழில் செய்­ப­வர்­களை நிறுத்தும் நட­வ­டிக்கையை மாகாண மீன்­பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சு முல் லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்து டன் இணைந்து செய்யும். எதிர்வரும் மாகாண சபை அமர்விலும் மீன்பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சின் ஆலோ-சனைக் கூட் டத்திலும் இது விட-யங்களைச் சமர்ப்பித்து உரிய நடவ-டிக்கை-களைத் துரிதமாக எடுப் பதற்கு ஆவன செய்வேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here