வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு அருள் மிகு சிறி நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 17.06.2015 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
ஆலய மகோற்சவத்தினை ஒட்டி அடியவர்களின் நலன் கருதி அறங்காவலர் சபையினால் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழமை போன்று அமுதசுரபி அன்னதான சபை வரும் அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நயினாதீவு அருள் மிகு சிறி நாகபூசணி அம்மன் கொடியேற்றத்திற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இம்முறையும் உற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் கலந்துகொள்வார்கள் எனக் கருதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உணவு மற்றும் குளிர்களி வர்த்தக நிலையங்கள் உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் எனவும் இம்முறையும் பச்சை குற்றுதல் நடவடைக்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.