தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் நிதிபெற்ற விடயம் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் உரிய விளக்கமளிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியை சந்தித்திருந்த வடமாகாண சபை முலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தென்னிலங்கைக்கு அழைத்து பெருமளவான நிதி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார் என தகவல்கள் வெ ளியாகியிருந்தன.
இது தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே முதல்வரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற சந்திப்பில் ஏனைய தலைவர்களுடன் இவ்விடயம் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். உண்மைக்கு புறம்பான வகையில் தென்னிலங்கையில் நிதி பெற்றதாக தகவல்கள் வெ ளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சரே கருத்துக்களை முன்வைத்ததாகவும் அத்தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவெடுத்துள்ளன.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய விளக்கமளிக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். இதற்கான உரிய பதில் கிடைக்கப்பெற்றதும் இவ்வாறு பொய்ப் பிரசாரம் மேற்கொண்ட ஊடகங்களுக்கான விளக்கத்தை நாம் வழங்கத் தயாராக வுள்ளோம். இதற்காக விசேட அறிக்கையொன்றைத் தயார் செய்து வருகின்றோம் என்றார்.
Close