அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக முடியும்.
இதற்கிடையில்,தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையிலிருந்தார்.
இந்நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு நிறைவு பெற்றது. இந்த மாநிலத்தில் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றியுள்ளார்.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாகவுள்ள நிலையில், ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
டொனால்ட் ட்ரம்புக்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.