தேர்­தல்­ மு­றை­ மாற்­ற ­யோ­ச­னையை தமிழ்த் தேசிய கூட்­ட­­மைப்பு நிரா­க­ரிப்­பு!

0
230

tnaசிறு­பான்மை தேசிய இனங்­களைப் பாதிக்கும் வகையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள தேர்­தல்­முறை மாற்ற யோச­னை­யினை உள்­ள­டக்­கிய 20ஆவது திருத்தச் சட்­ட­ மூ­லத்­தினை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யா­தென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

தமிழர் தாய­கங்­க­ளான வடக்கு, கிழக்கில் நீண்­ட­கா­ல­மாக நிறை­வு­றா­தி­ருக்கும் மீள்­கு­டி­யேற்றம், அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பாக அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­ததன் பிர­காரம் உடன் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை எதிர்­வரும் 23ஆம் திக­திக்கு முன்­பா­க வும் நேரில் சந்­தித்து வலி­யு­றுத்­து­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் செய­லா­ளர்­க­ளுக்­கி­டை­யி­லான ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டம் நேற்­றைய தினம் யாழி­லுள்ள இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை. சேனா­தி­ராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன், டெலோ சார்பில் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஹென்றி மகேந்­திரன், புளட் சார்பில் த. சித்­தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்­கேற்­றனர்.
இச்­சந்­திப்புத் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,
புதிய அர­சாங்கம் ஆட்சிப் பீடத்தில் அமர்­வ­தற்கு தமிழ் மக்­களின் ஆணை அதி­க­ளவில் செல்­வாக்குச் செலுத்­தி­யி­ருந்­தது. இந்­நி­லையில் புதிய அர­சாங்கம் 100 நாள் வேலைத்­திட்­டத்தை அறி­வித்து எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்றம், நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை, வாழ்­வா­தார மேம்­பாடு, இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலங்­களை மீள வழங்­குதல், உயர் பாது­காப்பு வல­யங்­களை அகற்­றுதல் உள்­ளிட்ட அவ­ச­ர­மாக வடக்கு கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய செயற்­பா­டு­க­ளுக்குச் செயல்­வ­டிவம் கொடுப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தார்கள்.

தற்­பொ­ழுது அர­சாங்கம் அறி­வித்த 100 நாட்­களில் அவ்­வா­றான வாக்­கு­று­திகள் எவையும் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. குறிப்­பாக வலி­காமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலம் விடு­விப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­ட­போதும் குறை­வான நிலப்­ப­ரப்பே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று வளலாய்ப் பகு­தி­யிலும் குறைந்­த­ள­வான காணி­களே விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. சம்பூர் பிர­தே­சத்தில் காணி­களை வழங்­கு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை ஜனா­தி­பதி விடுத்த பின்பும் இன்­று­வரை அவை மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு வட­கி­ழக்கில் தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் திட்­ட­மி­டப்­பட்டு கப­ளீ­கரம் செய்­யப்­ப­டு­வ­துடன் உயர் பாது­காப்பு வல­யங்­க­ளா­கவும் படை முகாம்கள் அமைப்­ப­தற்­கா­கவும் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதே­நேரம் தமிழ் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணைகள் எது­வு­மின்றி இலங்­கையின் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்குப் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் நாம் பல தட­வைகள் கோரி­யுள்ளோம். இருந்­த­போதும் இவர்­களின் விடு­தலை தொடர்­பாக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் உரு­வான அர­சாங்கம் இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கா­ததன் கார­ணத்தால் நாம் ஆழ்ந்த கவலை அடை­வ­துடன் ஏமாற்­றமும் அளிப்­ப­தாக உள்­ளது.

ஆகவே இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் எமக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்­க­மை­வாக உரிய நட­வ­டிக்­கையை உடன் எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை நேரில் சந்­தித்து வலி­யு­றுத்தத் தீர்­மா­னித்­துள்ளோம். இச் செயற்­பாடு எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு முன்­ன­தாக கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here