ஒஸ்ரியத் தலைநகரில் வெடித்தது ஆயுததாரிகள் – பொலீஸ் சமர் – ஆறு இடங்களை இலக்கு வைத்து தாக்குதல்.!

0
134
ஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது.
பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன. பலர் காயமடைந்துள்ளனர்.

நகரில் நேற்றிரவு இரவு 8 மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயதபாணிகளுடன் பொலீஸார் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. நகரில் ஆறு இடங்களை ஆயுதபாணிகள் இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் என்று பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு உடை அணிந்த ஒருவர் நீளமான இயந்திரத் துப்பாக்கியுடன் ஓடுகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் இதனை “ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்று தெரிவித்திருக்கிறார். தப்பி ஓடிய ஆயுதபாணி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்காக வீயன்னா நகரப் பகுதி முற்றுகையிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.

நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. வேட்டுச் சத்தங்களால் பீதியடைந்த பலரும் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வீயன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

“நெருக்கடியான இந்தத் தருணத்தில் பாரிஸ் மக்கள் வீயன்னாவின் பக்கம் நிற்கின்றனர் ” என்று பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here