இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று அபாயம் யாழ்பாணத்திலும் பாதிப்புக்களை ஏற்படத்தி வருகின்றது.
யாழ்.மாநகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு முற்றாக தடைவிதிக்குமாறு மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையில் நேற்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.
யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு எந்தத் தடையையும் நாங்கள் தற்போது விதிக்கவில்லை.உணவகங்களில் தயாரித்த உணவை, பொதிகள் மூலம் வழங்கவேண்டும் என யாழ்.மாநகரசபை சகல உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.
உணவக உரிமையாளர்கள் இந்த நடைமுறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது மக்கள் உணவகங்களில் அமர்ந்திருந்து உண்ணுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்த நடைமுறைகளைப் கண்காணிப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.